×

மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் கலெக்டர் ஆய்வு

மன்னார்குடி, பிப். 7: திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர்  வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைய உள்ள  வாக்கு சாவடி மையங்களை  கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட சவளக்காரன் கிராமத்தில் வாக்கு சாவடி மையம் அமைய உள்ள அரசு ஆதிதிராவிடர்  நல மேல்நிலைப் பள்ளியில்  மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க செல்வதற்கு ஏதுவாக சாய்தள வசதி, மின்சாரம், குடிநீர், கட்டிடத்தின் உறுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை  கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட ராஜாம் பாளையம் நடு நிலைப்பள்ளி, பிரகாசம் அரசு  உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் வாக்கு சாவடி மையம் அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என பார்வையிட்டார். பின்னர்  மன்னார்குடி தாலுகாவிற்குட்பட்ட சோழபாண்டி கிராமத்தில் அரசு உதவி பெறும்  மீனாட்சி மாரியப்பன் உயர்  நிலைப்பள்ளி, தலையாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாலையூர் அரசினர் உயர்  நிலைப்பள்ளி உள்ளி–்ட்ட பள்ளிகளில் வாக்கு சாவடி மையம் அமைப் பதற்காக கட்டிடத்தின் அளவு, சாய்தள வசதி, குடிநீர்,  மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர்  பத்மாவதி, வட்டாட்சி யர் லட்சுமி பிரபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,Mannargudi ,polling centers ,Kothur ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...